Home Featured இந்தியா பூப்பந்து : இந்தியாவின் சிந்து வெற்றி!

பூப்பந்து : இந்தியாவின் சிந்து வெற்றி!

554
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wide

ரியோ டி ஜெனிரோ – பூப்பந்துப் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஓக்குஹாராவைத் தோற்கடித்து இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றார்.

முதல் ஆட்டத்தில் 21-19 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து இரண்டாவது ஆட்டத்தில் 21-10 புள்ளிக் கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்தார்.

#TamilSchoolmychoice

இனி அடுத்து நடைபெறும் இறுதிப் போட்டியில் சிந்து வென்றால் தங்கப் பதக்கம் கிடைக்கும். தோல்வியுற்றாலும் வெள்ளிப் பதக்கம் உறுதி.