ஷா ஆலாம், மார்ச்.19- லாகாட் டத்து விவகாரத்தில் அம்னோ மீது அவதூறு தூற்றியதற்காக இன்னும் மன்னிப்பு கேட்காத பட்சத்தில், பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என்று அம்னோ தரப்பு கூறியது.
தியான் சுவா அம்னோ மீது சுமத்தப்பட்ட பழிக்கு மன்னிப்பு கேட்காவிடில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்னோ பொது செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் பத்திரிக்கை அறிக்கையின் வழி தெரிவித்தார்.
லகாட் டத்துவில் சுலு படையினரின் ஊடுருவலுக்கு அம்னோ தான் காரணம் என்று தியான் சுவா கடந்த மார்ச் 1 ஆம் தேதி வெளியிட்ட கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கடந்த வியாழக்கிழமை அவர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதற்கு முன்னதாக, தியான் சுவா லகாட் டத்துவில் சுலு படையினரின் ஊடுருவலுக்கு அம்னோ தான் காரணம் என்று கூறிய அவதூறுக்கு ஏழு நாட்களில் மன்னிப்புக் கேட்க வேண்டும், அதே வேளையில் லாகட் டத்து தொடர்பான விவாகரத்தில் வதந்திகளும் பழிகளும் பரப்புவதை நிறுத்தக் கோரியும் வழக்கறிஞர் மூலம் அம்னோ தரப்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.