Home Featured நாடு பூப்பந்து : இரட்டையர் ஆட்டத்தில் மலேசியா தோல்வி! வெள்ளிப் பதக்கம் மட்டுமே!

பூப்பந்து : இரட்டையர் ஆட்டத்தில் மலேசியா தோல்வி! வெள்ளிப் பதக்கம் மட்டுமே!

668
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wide

ரியோ டி ஜெனிரோ – (சனிக்கிழமை அதிகாலை 01-15 மணி நிலவரம்) பூப்பந்து இரட்டையர் ஆட்டத்தில் இறுதிச் சுற்றில் மலேசிய இணை கோ வி ஷெம் மற்றும் டான் வீ கியோங் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

முதல் செட் ஆட்டத்தில் வெற்றி பெற்ற மலேசிய இரட்டையர் இணை, இரண்டாவது செட் ஆட்டத்தில் தோல்வியடைந்தது.

#TamilSchoolmychoice

மலேசியாவின் கோ வி ஷெம் மற்றும் டான் வீ கியோங் இணை, சீனாவின் ஃபூ ஹாய்ஃபெங் மற்றும் சாங் நான் இணையோடு இறுதி ஆட்டத்தில் இன்று மோதினார்கள்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது செட் ஆட்டத்தில் இரண்டு இணைகளுக்கும் இடையிலான போராட்டம் இறுதிப் புள்ளி வரை தொடர்ந்து கொண்டிருந்தது. சீன இணை 22-21 என ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் இந்த ஒலிம்பிக்சில் மலேசியாவை வெற்றி கொண்டது.