Home Featured நாடு பூப்பந்து இறுதி ஆட்டம்: இதயம் பத்திரம் மலேசியர்களே – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பூப்பந்து இறுதி ஆட்டம்: இதயம் பத்திரம் மலேசியர்களே – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

884
0
SHARE
Ad

lee chong weiகோலாலம்பூர் – டத்தோ லீ சோங் வேய் பங்கேற்கும் ஒலிம்பிக் பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று சனிக்கிழமை இரவு, மலேசிய நேரப்படி 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், விறுவிறுப்பான இந்த ஆட்டத்தை காண்பவர்கள் தங்கள் இதயத்தையும் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

உயர் இரத்த அழுத்தமுள்ளவர்கள், இருதயக் கோளாறு உள்ளவர்கள், இன்றைய ஆட்டத்தின் போது தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்து கொள்ளும் படியும் சுகாதாரத்துறை ஆலோசனை கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

“மலேசியர்கள், குறிப்பாக மூத்த குடிமகன்கள் இன்றைய தங்கப் பதக்கத்திற்கான ஆட்டத்தைக் காணும் போது தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பார்க்க வேண்டும்” என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக 999 என்ற எண்ணிற்கு அழைத்து மருத்து உதவி கோரும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது.