Home Featured கலையுலகம் “எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர்” – கமலுக்கு ரஜினி பாராட்டு!

“எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர்” – கமலுக்கு ரஜினி பாராட்டு!

580
0
SHARE
Ad

Rajini Kamalசென்னை – நடிகர் கமல்ஹாசனுக்கு பிரஞ்சு நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, அவரது திரையுலக நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கலைத்துறையில் நடிகர் கமல்ஹாசனின் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், பிரஞ்சு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு, கடந்த 1995-ம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.