Home Featured தொழில் நுட்பம் வயர்லெஸ் ஏர்பாட்ஸ், ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்களுடன் ஐபோன் 7 அறிமுகம்!

வயர்லெஸ் ஏர்பாட்ஸ், ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்களுடன் ஐபோன் 7 அறிமுகம்!

1166
0
SHARE
Ad

iphone-7சான் பிரான்சிஸ்கோ – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆப்பிள் மாநாட்டில், ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகியவற்றின் சிறப்பம்சங்களை ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டார்.

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளசின் சிறப்பம்சங்கள்:

#TamilSchoolmychoice

தொடுதிரை

ஐபோன்  7, 4.7” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடன் 3டி தொடுதிரை கொண்டது. இதன் தடிமன் 7.1 மி.மீ.
ஐபோன் 7 ப்ளஸ் மாடல் 5.5” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடனும் 3 டி தொடுதிரையுடனும் வெளிவந்துள்ளது. இதன் தடிமன் 7.3 மி.மீ ஆகும்

எடை

ஐபோன் 7 138 கிராம் எடையும் 7 ப்ளஸ் 188 கிராம் எடையும் கொண்டுள்ளது.

செயலி

ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் ஆகிய இரண்டும் 4 ஜிபி ரேம் நினைவகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிளின் பிரத்யேகமான “A10 பியூசின்”  சிப்கள் முதல் முறையாக இந்த இரண்டு மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் இது 2.4GHz பிராசசர் கொண்டுள்ளதால் அதிக அளவிலான செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதே போன்று இந்த மேம்படுத்தப்பட்ட பிராசசரின் காரணமாக கடந்த மாடல்களை விட அதிக நேரம் பேட்டரி இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

iphone7plusகேமரா

ஐபோன் 7 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. ஐபோன் 7 ப்ளஸ் அதிக தூரத்தில் உள்ளதை படம் பிடிக்கும் வகையில் இரண்டு 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD  முன்பக்க செல்ஃபி (தம்படம்) கேமராவும் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட டிஎஸ்எல்ஆர் கேமராவிற்கு இணையான புகைப்படங்களை எடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

நிறம்
இந்த இரண்டு போன்களும் சில்வர், கோல்டு, ரோஸ் கோல்டு, பிளாக் மற்றும் ஜெட் பிளாக்  ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.

சிறி
ஆப்பிளின் பிரத்தியேகமான சிறப்பம்சங்களில் ஒன்றான  சிறி (பர்சனல் வாய்ஸ் அசிஸ்டன்ட்) இனி லின்க்டுஇன், பேஸ்புக் மற்றும் மற்ற நிறுவனங்களின் ஆஃப்களிலும் பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

iphone71ஒலி
ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ்-ல் முதல் முறையாக இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்னொரு முக்கியச் சிறப்பம்சமாக, கம்பியில்லாக் கேட்பொலி (வயர்லெஸ் ஆடியோவுக்கு) முன்னுரிமை அளிக்கும் வகையில் ஹெட் போன் ஜாக் விலக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிதாக வயர்லெஸ் “ஏர்பாட்ஸ்” என்னும் ஹெட் போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 900 மில்லியன் ஏர்பாட்ஸ்களை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. மலேசியாவில் வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஏர்பாட்சின் விலை 159 அமெரிக்க டாலர் (640 ரிங்கிட்)

விலை

ஐபோன் 7, 32 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் குறைந்தபட்ச மாடலின் விலையாக $649வும், அதிகபட்ச மாடலின் விலை $849 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஐபோன் 7 பிளஸ், 32 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகிய வகைகளில் கிடைக்கிறது. இதன் குறைந்தபட்ச மாடலின் விலையாக $769வும், அதிகபட்ச மாடலின் விலை $969 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 16 முதல் அமெரிக்கா மற்றும் இன்னும் பல நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ள ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ், மலேசியாவில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.