கோலாலம்பூர் – அமைதியை காக்கும் நடவடிக்கையின் படி, லெபனானில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப்படையில் இணைய மலேசிய இராணுவத்தின் 215 பேர் கொண்ட முதல் குழு ( Malaysian Battalion -Malbatt 850-4) நேற்று புதன்கிழமை புறப்பட்டது.
துணை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ மொகமட் ஜோஹாரி பஹாரும் அவர்களை நேற்று சுபாங் விமானப் படைத்தளத்தில் வழியனுப்பி வைத்தார்.
கடந்த ஆண்டு லெபனான் அனுப்பி வைக்கப்பட்ட மால்பாட் 850-3 படைக்குப் பதிலாகத் தற்போது இக்குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 215 பேர் சென்றுள்ள நிலையில், எஞ்சிய 635 பேர் கொண்ட குழு வரும் செப்டம்பர் 14 மற்றும் செப்டம்பர் 26 ஆகிய தேதிகளில் அனுப்பி வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, நேற்று நடைபெற்ற வழியனுப்பும் நிகழ்வில் இராணுவ வீரர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு, கண்ணீர் மல்க அவர்களை வழியனுப்பி வைத்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.
படங்கள்: (Malaysian Army)