Home One Line P1 சட்டவிரோதக் குடியேறிகள் எல்லையைக் கடக்காமலிருக்க முள்வேலிகள் அமைப்பு

சட்டவிரோதக் குடியேறிகள் எல்லையைக் கடக்காமலிருக்க முள்வேலிகள் அமைப்பு

597
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியா- தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள பாசிர் மாஸ், தம்பாக்கில் கோலோக் ஆற்றின் குறுக்கே மொத்தம் 13 சட்டவிரோத தளங்கள் என்று அடையாளங் காணப்பட்ட இடங்களில் முள்வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டினரின் அத்துமீறல், பல்வேறு எல்லை தாண்டிய குற்றச் செயல்களைத் தடுக்க இந்த முள்வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மலேசிய ஆயுதப்படைகள் மற்றும் பொதுப் பாதுகாப்பு படை ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் விளைவாக முள்வேலிகள் நிறுவப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

8- வது படைப்பிரிவு தளபதி ஜெனரல் சம்சாரி அபு ஹசான் கூறுகையில், ஒவ்வொரு 500 மீட்டர் நீளமுள்ள தடுப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எல்லை தாண்டிய குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான பல்வேறு தரப்பினரின் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பதற்கும் இது உதவுகிறது.

“இது அனைத்து தரப்பினரும் அமைக்கப்பட்ட வழிமுறைகளுக்கு இணங்குவதற்கான நினைவூட்டலாகும் அல்லது அவர்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

“சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் மேற்கொண்ட கண்காணிப்பின் போது, ​​59 சட்டவிரோத குடியேறியவர்களை தடுத்து வைத்துள்ளோம். 4.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.