Home Featured நாடு கேலாங் பாத்தா அம்னோ நிரந்தரத் தலைவர் கட்சியிலிருந்து விலகினார்!

கேலாங் பாத்தா அம்னோ நிரந்தரத் தலைவர் கட்சியிலிருந்து விலகினார்!

770
0
SHARE
Ad

gelang-pathaஜோகூர் பாரு – கேலாங் பாத்தா அம்னோ பிரிவின் நிரந்தரத் தலைவரான டத்தோ பாஹாரோம் அப்துல் கானி, தான் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

கேலாங் பாத்தா தொகுதியின் தொடக்கால உறுப்பினரான பாஹாரோம், கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2004 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர்.

இந்நிலையில் தான் கட்சியிலிருந்து விலகுவது குறித்து விளக்கமளித்துள்ள பாஹாரோம், ” இனி அம்னோ என்பது மலாய்காரர்களுக்கான கட்சி அல்ல. அது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சொத்தாக மாறிவிட்டது. இனி அதைக் காப்பாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளதாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice