Home Featured தொழில் நுட்பம் அடுத்த உலகத் தமிழ் இணைய மாநாடு கனடாவில் நடைபெறுகின்றது!

அடுத்த உலகத் தமிழ் இணைய மாநாடு கனடாவில் நடைபெறுகின்றது!

1182
0
SHARE
Ad

infitt2

சென்னை – உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய 15வது உலகத்தமிழ் இணைய மாநாடு செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை தமிழகத்தின் திண்டுக்கல் நகரில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

அடுத்த 16 வது உலகத் தமிழ் இணைய மாநாடு அடுத்த ஆண்டு 2017-இல் மேலும் சிறப்பான, விரிவான ஏற்பாடுகளுடன்  கனடா நாட்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

2017 ஆகஸ்ட் மாதம் 25,26,27 ஆகிய நாட்களில் கனடாவில் உள்ள தொராண்டோ மாநகரத்தில் நடக்கவிருக்கும் இந்த தமிழ் இணைய மாநாடு கனடாவில் நடைபெறவிருக்கும் முதல் மாநாடாகும்.