Home Featured நாடு மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!

மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!

1542
0
SHARE
Ad

najib-tamil-signature-tamil-school-200-years

புத்ரா ஜெயா – மலேசியாவில் தமிழ்க் கல்வி போதிக்கப்படத் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்னும் நீடித்துக் கொண்டிருப்பதைக் கொண்டாடும் விதமாக, மலேசியக் கல்வி அமைச்சு பல்வேறு விதமான நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் நடத்தி வருகின்றது.

தமிழர்கள் புலம்பெயர்ந்த பல நாடுகளில் தமிழ் மொழி சிதைந்திருக்கும் நிலையில் மலேசியாவில் இன்னும் தமிழ் மொழி, தமிழ்ப் பள்ளிகளின் வழியாகவும், தமிழர்களின் முயற்சிகளோடும் இன்னுத் தழைத்தோங்கி வருகின்றது.

#TamilSchoolmychoice

தமிழ்க் கல்வியின் 200-ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் “தமிழின் எழுச்சி தலைமுறை வளர்ச்சி” என்ற முழக்கத்துடன் கொண்டாடப்படுகின்றது.

நஜிப் தமிழில் கையெழுத்து

தமிழ்க் கல்வி 200-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அதன் நினைவுப் பதிவேட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமிழில் கையெழுத்திட்டுள்ளார். துணைக் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் முன்னிலையில் நஜிப் தமிழில் கையெழுத்திட்டார்.

தமிழில் நஜிப்பின் கையெழுத்தைக் கொண்ட பதிவேட்டை மேலே படத்தில் காணலாம்.

இதே பதிவேட்டில், கல்வி அமைச்சர் மாட்சீர் காலிட்டும் தமிழில் கையெழுத்திட்டுள்ளார்.

najib-signing-in-tamil-kamalanathan

 

துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் முன்னிலையில் தமிழில் கையெழுத்திடும் நஜிப்…

najib-tamil-signature-kamalanathan

தனது தமிழ்க் கையெழுத்தைக் காட்டி மகிழும் பிரதமர் நஜிப்….