Home Featured நாடு சிவப்பு சட்டை ஜமால் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு – மரியா சின் அறிவிப்பு!

சிவப்பு சட்டை ஜமால் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு – மரியா சின் அறிவிப்பு!

910
0
SHARE
Ad

Maria Chin Abdullah

கோலாலம்பூர் – பெர்சே 2.0 இயக்கத்தில், ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளார்கள் என ‘சிவப்பு சட்டை’ அணியை நடத்தி வரும் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்துக்குள் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் மீது வழக்கு தொடுக்கப்படும் என பெர்சே தலைவர் மரியா சின் (படம்) அறிவித்துள்ளார்.

இதுகுறித்த வழக்கறிஞர் கடிதம் ஒன்றை மரியா சின் ஜமாலுக்கு அனுப்பியுள்ளார். இதுபோன்ற அவதூறு அறிக்கைகளை ஜமால் தொடர்ந்து வெளியிடக் கூடாது என்றும் மரியா சின் கோரியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஐஎஸ் தீவிரவாதிகள் பெர்சேயில் ஊடுருவியுள்ளார்கள் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும் அவ்வாறு கூறியதற்கு ஜமால் நஷ்ட வழங்க வேண்டும் என்றும் மரியா சின் தனது வழக்கறிஞர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.