Home Featured நாடு மின்தூக்கியின் உள்ளே சிக்கிக் கொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

மின்தூக்கியின் உள்ளே சிக்கிக் கொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

631
0
SHARE
Ad

sarawak-hospitalகூச்சிங் – கூச்சிங்கிலுள்ள சரவாக் பொது மருத்துவமனை மின்தூக்கியில் சிக்கிக் கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு அங்கேயே ஆண் குழந்தை பிறந்தது.

மின்தூக்கியின் உள்ளே அப்பெண் சிக்கிக் கொண்டதாகத் தகவல் வந்த உடனேயே, பத்து லிந்தாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளும், அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த 3 அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் ஃபார்கான் சுஃப்யான் போல்ஹான் தெரிவித்துள்ளார்.

8 நிமிடங்களில் அவ்விடத்தை அவர்கள் அடைந்துவிட்டார்கள் என்றும், என்றாலும் அதற்குள் குழந்தையைப் பெற்றெடுத்துவிட்ட அப்பெண்ணையும், பிறந்த அக்குழந்தையையும் அவர்கள் மீட்டனர் என்றும் ஃபார்கான் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice