Home Featured நாடு சிவப்பு சட்டை ஜமால் மீது பெர்சே மரியா சின் வழக்கு தொடுத்தார்!

சிவப்பு சட்டை ஜமால் மீது பெர்சே மரியா சின் வழக்கு தொடுத்தார்!

763
0
SHARE
Ad

maria chin abdullah

கோலாலம்பூர் – பெர்சே 2.0 தலைவர் மரியா சின் அப்துல்லா, சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவரும், சிவப்பு சட்டை அணியின் தலைவருமான ஜமால் முகமட் யூனுசுக்கு எதிராக வழக்கு ஒன்றை நேற்று நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.

நாட்டின் தேர்தல்கள் சுதந்திரமானதாகவும், ஜனநாயக முறைப்படியும், தூய்மையுடனும் நடைபெற வேண்டும் எனப் போராடி வரும் பெர்சே இயக்கத்தில் ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என டத்தோ ஜமால் யூனுஸ் தெரிவித்துள்ள கருத்து, அவதூறு தன்மை கொண்டது எனக் காரணம் காட்டி, மரியா சின் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஜமால் யூனுஸ் கூறியிருக்கும் அவதூறு வார்த்தைகளால் தனது தோற்றமும், பெர்சே இயக்கத்தின் மரியாதையும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மரியா சின் கூறியுள்ளார்.

மேலும், கேஎல்ஐஏ 1, கேஎல்ஐஏ 2, விமான நிலையங்களை செயல்படாமல் செய்வதற்கு, தான் தைவான், தாய்லாந்து நாட்டிலிருந்து ஆலோசகர்களை வரவழைத்திருப்பதாவும் ஜமால் அவதூறாகக் கூறியிருக்கின்றார் என்றும் மரியா சின் தனது வழக்கில் தெரிவித்துள்ளார்.

ஜமால் தன்மீது சுமத்தியுள்ள அவதூறுகளை மீட்டுக் கொள்ளாவிட்டால், அவர் மீது அவதூறு பரப்பியதற்காக வழக்கு தொடுப்பேன் என மரியா சின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.