Home Featured இந்தியா காவிரி: 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு – அமித் ஷாவைச் சந்திக்கும் தமிழக...

காவிரி: 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு – அமித் ஷாவைச் சந்திக்கும் தமிழக பாஜக தலைவர்கள்!

890
0
SHARE
Ad

amit-shah-tamilisai23

புதுடில்லி – காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பில் வழக்குகளை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை புதுடில்லியிலுள்ள உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

காவிரி நதிநீர் திறந்து விடுவது குறித்த விவகாரம், அதற்கான தமிழக அரசின் கோரிக்கை, கர்நாடக அரசின் எதிர்ப்பு மனு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசாங்கத்திற்கு உச்ச நீதிமன்றம் விடுத்திருக்கும் உத்தரவு, அதற்கான மத்திய மரசின் மறுப்பு என பல முனைகளிலும் விரிவடைந்து கொண்டே போகும் காவிரி பிரச்சனையில் அனைத்து பிரச்சனைகளையும் ஒருங்கே விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் காவிரி தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷாவை சந்திக்கும் பாஜக தலைவர்கள்

sc_cauvery_01072013

இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மறுத்திருக்கும் பாஜக அரசாங்கத்திற்கு எதிராக தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக போராட்டத்தில் குதித்துள்ளன.

தமிழக மக்களை பாஜக வஞ்சித்து விட்டதாகவும், துரோகம் இழைத்து விட்டதாகவும், தமிழக அரசியல் கட்சிகள் அறைகூவல்கள் விடுத்து வருவதால், நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

tamilisai-soundararajanஇந்நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவைச் சந்திக்க தமிழக பா.ஜ.க. தலைவர்கள், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்  தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்திக்கின்றனர்.

இந்த குழுவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், முன்னாள் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அமித் ஷாவிற்கு மனமாற்றம் ஏற்படுத்தும் வண்ணம்  தமிழக பாஜக தலைவர்கள் அவரிடம் தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறுவர் என்று எதிர்பார்க்கப்படுவதால், மத்திய அரசாங்கத்தின் முடிவில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.