திருச்சி – “பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும். இயற்கையை காக்க வேண்டும். அதனை வலியுறுத்தி என் உயிரை விடுவதற்கு நான் முடிவு செய்துவிட்டேன். 127 கோடி மக்களின் நன்மைக்காக நான் உயிரை விடுவதில் எந்த தவறும் இல்லை”
– மேற்கூறிய வார்த்தைகள் தமிழக இளைஞர் ஜவகர் காணொளி ஒன்றில் பதிவு செய்த இறுதி வார்த்தைகள். கடந்த திங்கட்கிழமை தஞ்சாவூர் கால்வாயில் 23-வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தினாலும் அதன் பின்னணியில் இப்படியொரு உண்மை இருப்பது தற்போது தான் தெரிய வந்துள்ளது.
சிறுவயது முதல் இயற்கை மீது தீராத காதல் கொண்ட ஜவகருக்கு, சமூகத்தில் பிளாஸ்டிக்கின் பயன்பாடும் அதன் தீய விளைவுகளும் பெரும் வருத்தத்தை தந்துள்ளன. இதற்காக தஞ்சை பகுதியில் பல்வேறு போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் முன்னெடுத்துள்ளனர். எனினும் அது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் அவர் இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
இது தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.