Home Featured வணிகம் பினாங்கில் குறைந்த கட்டண விமான நிலையம் வேண்டும் – ஏர் ஆசியா தலைவர் கருத்து!

பினாங்கில் குறைந்த கட்டண விமான நிலையம் வேண்டும் – ஏர் ஆசியா தலைவர் கருத்து!

679
0
SHARE
Ad

Aireen Omar Air Asiaஜார்ஜ் டவுன் – பினாங்கில் குறைந்த கட்டண விமான நிலையம் ( low-cost carrier terminal) ஒன்று தேவை என ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஐரீன் ஓமார் தெரிவித்துள்ளார்.

பினாங்கில் நடைபெற்ற உலக சுற்றுலா மாநாடு 2016-ல் பேசிய ஐரின் ஓமார், “பினாங்கில் தனியாக ஒரு குறைந்த கட்டண விமான நிலையத்தைக் காண விரும்புகிறோம். ஏனென்றால் அப்போது தான் நம்மால் எளிதில் வரையறுக்கப்பட்ட இடங்களுக்குத் தொடர்பை ஏற்படுத்த இயலும்”

“பினாங்கு அனைத்துலக விமான நிலையம் சற்று நெருக்கடியாக உள்ளது. பினாங்கில் மேலும் தொடர்புகளை ஏற்படுத்தவும் மேம்படுத்தவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனினும் எதிர்பாராதவிதமாக உள்கட்டமைப்பில்  சிக்கல் உள்ளது.” என்று ஐரின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice