Home Featured இந்தியா நவம்பர் 14 நள்ளிரவு வரை இந்தியாவில் சாலை சுங்க வரி இல்லை!

நவம்பர் 14 நள்ளிரவு வரை இந்தியாவில் சாலை சுங்க வரி இல்லை!

1089
0
SHARE
Ad

india-tollgate-highway

புதுடில்லி – இந்தியாவின் சாலை சுங்க வரி (டோல் கட்டணம்) மையங்களில் இன்று வெள்ளிக்கிழமை வரை கட்டண வசூலிப்பு இல்லை என ஏற்கனவே இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.

இருப்பினும், புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் விநியோகம், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, ஆகியவற்றினால், தொடர்ந்து வரும் குழப்பங்களைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 14-ஆம் தேதி நள்ளிரவு வரை இந்தியாவிலுள்ள அனைத்து சாலை சுங்கவரி மையங்களிலும் கட்டண வசூலிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice