Home Featured வணிகம் மலேசியர்களிடம் உள்ள 500, 1000 ரூபாய்களை மாற்ற நடவடிக்கை – சங்கம் அறிவிப்பு!

மலேசியர்களிடம் உள்ள 500, 1000 ரூபாய்களை மாற்ற நடவடிக்கை – சங்கம் அறிவிப்பு!

1109
0
SHARE
Ad

1000-rupees-noteகோலாலம்பூர் – மலேசியாவில் வசிப்பவர்கள் தங்களிடம் வைத்திருக்கும் 500, 1000 இந்திய ரூபாய் தாள்களை மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மலேசிய பணச்சேவை வர்த்தகச் சங்கம் (The Malaysian Association of Money Services Business) தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண மலேசியாவிலுள்ள பணச்சேவை மையங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 30, 2016-க்குள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளாதவர்கள், தங்களின் விவரங்களை சங்கத்திடம் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அத்தேதிக்குள் இந்தியா செல்பவர்கள் இந்தியாவில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வழிமுறைகளின் படி, மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

500, 1000 ரூபாய் வைத்திருப்பவர்கள் தங்களின் பெயர், நாடு, மின்னஞ்சல் முகவரி, செல்பேசி எண், கையில் வைத்திருக்கும் 500,1000 ரூபாய் தாள்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை admin@mamsb.org.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 03-77225808 என்ற செல்பேசி எண்ணிற்கு அழைத்துப் பதிவு செய்து கொள்ளலாம்.