Home Featured நாடு ‘கைது செய்யப்பட்டால் பரிசு’ – ஜமால் அறிவிப்பு!

‘கைது செய்யப்பட்டால் பரிசு’ – ஜமால் அறிவிப்பு!

831
0
SHARE
Ad

Dato Jamal Yunusகோலாலம்பூர் – வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பேரணியின் போது சிவப்புச் சட்டை அணியினர் யாராவது காவல்துறையால் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு ‘மிகப் பெரிய பரிசு’ அளிக்கப்போவதாக சிவப்புச் சட்டை அணியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ் அறிவித்துள்ளார்.

சிவப்புச் சட்டை அணியினருக்காக 38 வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் சட்டப்பூர்வ விவகாரங்களை கவனித்துக் கொள்வார்கள் என்றும் ஜமால் தெரிவித்துள்ளார்.

மேலும், பேரணியின் போது சிவப்புச் சட்டை அணியினர் வன்முறைகளில் இறங்கும் வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள ஜமால், “எங்களுடைய நிலைப்பாடு எப்போதும் ஒன்று தான். பெர்சே பேரணி செல்வதைத் தடுக்க வேண்டும். காரணம் அவர்கள் வெறும் பொய்யை மட்டுமே மக்களிடம் சொல்லி அரசாங்கத்தின் மேல் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice