Home Featured தமிழ் நாடு 4 இடைத் தேர்தல்களில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

4 இடைத் தேர்தல்களில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

783
0
SHARE
Ad

tamil-nadu-state-election-commission

சென்னை – இன்று சனிக்கிழமை தமிழ்நாடு, புதுச் சேரி மாநிலங்களில் 4 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்புகள் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தமிழ் நாட்டுத் தொகுதிகளிலும், புதுச் சேரியில் நெல்லித் தோப்பு தொகுதியிலும் இன்று வாக்களிப்பு நடைபெறுகின்றது.

#TamilSchoolmychoice

நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்தத் தொகுதியில் வென்றால்தான் முதல்வராகப் பதவியில் நீடிக்க முடியும்.

அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லையென்றாலும், புதுச் சேரி முதல்வராக காங்கிரஸ் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டார். இந்திய சட்டத்தின்படி மாநில முதல்வராக நியமிக்கப்பட்டவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லையென்றால், முதல்வர் பதவியில் நியமிக்கப்பட்ட ஆறு மாதங்களில் அவர் சட்டமன்ற தொகுதி ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும்.

அந்த வகையில், நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் ராஜினாமா செய்துவிட்டதால், அங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் நாராயணசாமி போட்டியிடுகின்றார்.

இன்று காலை, வாக்களிப்பு மையங்களுக்கு வருகை தந்து பார்வையிட்ட பின்னர், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நாராயணசாமி, நிச்சயமாக நெல்லித்தோப்பு இடைத் தேர்தலில் வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.