Home Featured நாடு பூச்சோங் டெஸ்கோவில் 1 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

பூச்சோங் டெஸ்கோவில் 1 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

1122
0
SHARE
Ad

puchong-tescoசெர்டாங் – இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில், பூச்சோங் டெஸ்கோவில் உள்ள நகைக் கடையில், துப்பாக்கியுடன் புகுந்த 6 பேர், அங்கிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பொதுமக்கள் முன்னிலையில் துணிச்சலாக இக்கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அதனைப் பலரும் புகைப்படமாகவும், காணொளியாகவும் பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இது குறித்து செர்டாங் காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் மொகமட் அமினுடின் மெகாட் மெகாட் அலியாஸ் கூறுகையில், சுமார் 1 லட்சம் (100,000) மதிப்புள்ள 8 டிரேயில் வைக்கப்பட்டிருந்த நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சம்பவத்தின் போது கடையில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை என்றும், அக்கடையில் ஊழியர்கள் மட்டுமே இருந்ததாகவும் அலியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

“துப்பாக்கி எதுவும் பயன்படுத்தப்படவில்லை. கடையில் இருந்த ஊழியர்களுக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. உண்மையாக எவ்வளவு கொள்ளை போயுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். குற்றவியல் சட்டம், பிரிவு 395 கீழ் இச்சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது” என்றும் அலியாஸ் தெரிவித்துள்ளார்.