கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட்டைத் தாக்கியவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குள் சரணடைய வேண்டும் என்று தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கெடு விதித்துள்ளார்.
அவ்வாறு அவர்கள் 2 மணிக்குள் சரணடையவில்லை என்றால், காவல்துறையால் கைது செய்யப்படுவார்கள் என்றும் காலிட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயம் மற்றும் வேளாண் துறையின் துணையமைச்சர் டத்தோஸ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மானின் மகன் பிர்டாவுஸ் தாஜுடின் உட்பட 10 பேர், காலிட் சமட் மீது தாக்குதலில் ஈடுபட்டதை காவல்துறை நேற்று உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.