கோலாலம்பூர் – பிகேஆர் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தான் விலகுவதாக, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிசி ரம்லி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
1எம்டிபி தணிக்கை அறிக்கையை சட்டத்திற்குப் புறம்பாக வைத்திருந்த குற்றத்திற்காக ரஃபிசிக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ள ரஃபிசி, தனது நிச்சயமற்ற சூழ்நிலை தினமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சியைப் பாதித்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டார்.
எனினும், தான் கட்சியின் உதவித் தலைவராக தொடர்ந்து இருக்கப் போவதாகவும் பிகேஆர் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரஃபிசி தெரிவித்தார்.
இதனிடையே, ரஃபிசிக்குப் பதிலாக பிகேஆர் பொதுச்செயலாளராக சைஃபுதின் நாசுதியான் இஸ்மாயில் பதவி ஏற்பார் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.