Home கலை உலகம் புதுமுகம் ஜோடியாக நடிக்க நடிகை தமன்னாவுக்கு ரூ.1.25 கோடி சம்பளம்

புதுமுகம் ஜோடியாக நடிக்க நடிகை தமன்னாவுக்கு ரூ.1.25 கோடி சம்பளம்

693
0
SHARE
Ad

tamanaசென்னை, மார்ச்.21-நடிகை தமன்னா இந்தியில் ‘ஹிம்மத்வாலா’ என்ற படத்தில் அஜய்தேவ் கான் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியிடப்பட  உள்ளது. ஏற்கனவே தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன் போன்ற பிரபல கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தற்போது பெல்லம்கொண்டா சுரேஷ் என்ற புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

#TamilSchoolmychoice

பெரிய கதாநாயகர்களுடன் நடித்தவர் புதுமுக நடிகருடன் நடிக்க எப்படி சம்மதித்தார் என்று தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இப்படத்தில் அவர் நடிப்பதற்கு பணம் தான் காரணம் என்கின்றனர்.

கடைசியாக தெலுங்கில் அவர் நடித்த ‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு’ என்ற படத்துக்கு ரூ.90 லட்சம் சம்பளம் வாங்கினார். ஆனால் புதுமுக நடிகர் பெல்லம் கொண்டா சுரேஷ் ஜோடியாக நடிக்க ரூ.1.25 கோடி தருவதாக ஆசை காட்டினார். கூடுதலாக ரூ.35 லட்சம் கிடைப்பதால் சம்மதம் சொன்னாராம்.

ஆனால் தமிழ் படங்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க யாரும் தயாராக இல்லை. எனவே தொடர்ந்து தெலுங்கு படங்களிலேயே நடிப்பார் என தெரிகிறது.