Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சத்குரு ஜக்கி வாசுதேவ்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சத்குரு ஜக்கி வாசுதேவ்!

813
0
SHARE
Ad

jaggi-vasudev-esha yoga

சென்னை – தமிழகத்தில் வெடித்திருக்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்திற்கு ஆன்மீகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆதரவு தெரிவித்துக் குரல் கொடுத்துள்ளார்.

தமிழகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ளாத மேற்கத்திய அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இந்தியர்களின் விவசாயத்தோடும், குறிப்பாகத் தமிழர்களின் வாழ்வியலோடும், பின்னிப் பிணைந்து விட்ட ஜல்லிக்கட்டு, நிபந்தனைகளோடு நடத்தப்பட வேண்டும் என்றும் ஜக்கி வாசுதேவ் இந்தியா டுடே ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.