புதுடெல்லி – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்த அவசர சட்ட வரைவை தமிழக அரசு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் அதனைப் பரிசீலித்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பரிந்துரைக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பிரணாப் முகர்ஜி அதற்கு அனுமதி அளித்தவுடன் மாநில ஆளுநரிடம் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
இதனிடையே, ஜல்லிக்கட்டு வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பு வழங்கக் கூடாது என மத்திய அரசு வைத்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் ஒரு வாரத்திற்குப் பிறகே தீர்ப்பு வழங்கவுள்ளது.