Home Featured நாடு பெர்த்தில் எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் லியாவ்!

பெர்த்தில் எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் லியாவ்!

872
0
SHARE
Ad

liow-tiong-laiசிட்னி – ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று திங்கட்கிழமை எம்எச்370 விமானப் பயணிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் மலேசியப் போக்குவரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்.

ஆஸ்திரேலியாவில் உள்ள எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினர், லியாவைச் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததையடுத்து இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லியாவ் கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து தேடுதல் பணிகளை மேற்கொள்வோம். மீண்டும் துவங்கவுள்ள தேடுதல் பணியின் மூலம் நிச்சயமான நம்பகத்தன்மையான ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்று லியாவ் தெரிவித்துள்ளார்.