Home Featured தமிழ் நாடு “கடலில் இறங்க வேண்டாம்” – கண்ணீர் மல்க லாரன்ஸ் வேண்டுகோள்!

“கடலில் இறங்க வேண்டாம்” – கண்ணீர் மல்க லாரன்ஸ் வேண்டுகோள்!

1123
0
SHARE
Ad

Lawrenceசென்னை – கடந்த 7 நாட்களாக அறவழியில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் இன்று திங்கட்கிழமை வன்முறையாக வெடித்தது. கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி போராட்டம் நடத்த, அவர்களை எதிர்த்து மாணவர்களும், இளைஞர்களும் கடலுக்குள் இறங்கி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மேலும், அரசாங்கமோ, நடிகர் லாரன்சோ அங்கு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாணவர்கள் யாரும் கடலில் இறங்க வேண்டாம். நமது உயிர் மிக முக்கியம். என்னை காவல்துறையினர் அங்கு அனுமதிக்க மறுக்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் அங்கு வந்து விடுவேன்” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், காவல்துறையினரின் பாதுகாப்போடு லாரன்ஸ் சற்று முன்பு மெரினா கடற்கரையை அடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

https://www.youtube.com/watch?time_continue=62&v=PTKqFVJd7kw