Home Featured தமிழ் நாடு மக்கள் போராட்டத்திற்கு வெற்றி: ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது!

மக்கள் போராட்டத்திற்கு வெற்றி: ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது!

737
0
SHARE
Ad

opsசென்னை – ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக தமிழகத்தோடு, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் நடத்தி வந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில், கடந்த சனிக்கிழமை, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த அவசர சட்டத்தின் சட்ட முன்வடிவு இன்று மாலை இந்திய நேரப்படி 5 மணியளவில் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்தார்.

அதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது.