வாஷிங்டன் – மெக்சிகோ நாட்டுடனான எல்லைப் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக, தடுப்புச் சுவர் ஒன்றை நிர்மாணிப்பேன் என தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது அதனைச் செயல்படுத்த முனைந்துள்ளார்.
அமெரிக்காவுடனான குடிநுழைவு மற்றும் எல்லைப் புறங்களில் பாதுகாப்புகளை வலுப்படுத்துவது போன்ற பல்வேறு விவகாரங்களில் தனது புதிய உத்தரவுகளில் டிரம்ப் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டார்
மெக்சிகோ நாட்டு எல்லையில் தடுப்புச் சுவரை நிர்மாணிப்பது அந்த உத்தரவுகளில் அடங்கும்.