Home Featured நாடு சிலாங்கூர் மசாஜ் பார்லர்களில் ஒழுக்கக்கேடுகள் – ஜமால் போராட்டம்!

சிலாங்கூர் மசாஜ் பார்லர்களில் ஒழுக்கக்கேடுகள் – ஜமால் போராட்டம்!

797
0
SHARE
Ad

Jamalகோலாலம்பூர் – சிலாங்கூரில் தண்ணீர் நிறுத்தம் ஏற்பட்ட போது, இடுப்பில் துண்டு மட்டும் அணிந்து சிலாங்கூர் மாநில செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனோஸ், இம்முறை 10 கட்டில் மெத்தைகளோடு சென்று புதிய ஆர்ப்பாட்டத்தின் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்திருக்கிறார்.

நேற்று புதன்கிழமை தனது குழுவினருடன் சிலாங்கூர் மாநில செயலகம் சென்ற ஜமால், அங்கு தனது போராட்டத்தை நடத்தினார்.

சிலாங்கூரில் மட்டும் சுமார் 4,000 உடம்புப் பிடி மையங்கள் (மசாஜ் பார்லர்) இருப்பதாகவும், அதற்கு மாநில அரசாங்கமே அனுமதி அளித்திருப்பதாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

அது போன்ற மையங்கள் சீனா, தாய்லாந்து, வியட்னாம், இந்தோனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெண்களை வேலைக்கு அமர்த்துவதாகவும், அதில் பல ஒழுக்கக்கேடுகள் இருப்பதையும் ஜமால் சுட்டிக் காட்டினார்.

மேலும், அது போன்ற உடம்புப் பிடி மையங்களுக்கு சிலாங்கூர் அரசு அனுமதி வழங்குவது ஏன்? என்று ஜமால் கேள்வி எழுப்பினார்.

ஒரே வீதியில் நிறைய உடம்புப் பிடி மையங்கள் இருப்பதால், அதிக போட்டி உருவாகி தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட மையங்கள், ‘சிறப்பு சேவைகளை’ வழங்குவதாகவும் ஜமால் குற்றம் சாட்டினார்.

அது போன்ற சிறப்பு சேவைகளில் ஒன்று ‘இலவச ஐஸ்கிரீம் சேவை’ என்று குறிப்பிட்ட ஜமால், செயலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கு தான் கையோடு கொண்டு வந்திருந்த ஐஸ்கிரீம்களையும் வழங்கினார்.