கோலாலம்பூர்- நாளை மலேசியாவில் வெளியாகவிருக்கும் ‘பியூட்டி அண்ட் தி பீஸ்ட்’ திரைப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அனுமதி வழங்கமாட்டோம் என ‘தி வால்ட் டிஸ்னி’ நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இது குறித்து டிஸ்னி நிறுவனம் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவித்திருக்கும் தகவலில், “மலேசியாவில் திரைப்படத்தில் எந்த ஒரு காட்சியிலும் வெட்டு இருக்காது” என்று தெரிவித்திருக்கிறது.
ஆனால் நேற்று மலேசியத் தணிக்கை வாரியம் வெளியிட்ட தகவலில், இத்திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கை சம்பந்தமான காட்சி ஒன்று வெட்டப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.