Home Featured உலகம் பிரிட்டன் நாடாளுமன்றத் தாக்குதல் பயங்கரவாதச் செயல்!

பிரிட்டன் நாடாளுமன்றத் தாக்குதல் பயங்கரவாதச் செயல்!

690
0
SHARE
Ad

The-British-Parliament

இலண்டன் – பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாதச் செயல் என பிரிட்டிஷ் காவல் துறையினர் வர்ணித்துள்ள வேளையில், தாக்குதல் நடத்திய ஒருவன் சுடப்பட்டான் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

  • நான்கு துப்பாக்கிச் சூடுகள் கேட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தொலைக்காட்சி ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
  • இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் பாதுகாப்புப் படையினரால் முற்றுகையிடப்பட்டிருக்கிறது.
  • இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
  • ஒரு நபர் காவல் துறை அதிகாரி ஒருவரைக் கத்தியால் முற்பட்டதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள் நடந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
  • முழுமையான விவரங்கள் தெரியும் வரை, நடந்த சம்பவத்தை பயங்கரவாதச் செயல் என வகைப்படுத்தியுள்ளதாகவும் காவல் துறையினர் அறிவித்தனர்.
    இன்று புதன்கிழமையாதலால் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்குப் பதிலளிக்க பிரிட்டிஷ் பிரதமர் நாடாளுமன்றத்தில் இருந்ததால், மேலும் பரபரப்பு கூடியிருக்கின்றது. எனினும் அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.