Home Featured உலகம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தாக்குதல்: 3 தாக்குதல்காரர்கள் நுழைந்தனர்!

பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தாக்குதல்: 3 தாக்குதல்காரர்கள் நுழைந்தனர்!

976
0
SHARE
Ad

britain-parliament-attack

இலண்டன் – (வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணி நிலவரம்) நேற்று புதன்கிழமை பிற்பகலில், சுற்றுப் பயணிகள் அதிகமாகக் கூடும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவற்றில் சில:

  • மிகக் கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மீறி 3 தாக்குதல்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர்.
  • தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவன் காவல் துறையினரால் சுடப்பட்டான்.
  • நாடாளுமன்றத்திற்கு வெளியே இருவர் சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
  • இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்திருக்கலாம் அல்லது மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
  • ஆங்காங்கு உடல்கள் கிடப்பதாகவும் சில பார்வையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
  • ஒரு கார் பொதுமக்களை நசுக்கும் விதத்தில் அவர்கள் மேல் செலுத்தப்பட்டதாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது. பொதுமக்கள் மீது ஏற்றப்பட்ட கார் நாடாளுமன்ற பாதுகாவலை மீறி உள்ளே நுழைந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  • வெஸ்ட்மினிஸ்டர் என அழைக்கப்படும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகம் தினந்தோறும் உலகம் எங்கிலும் இருந்து வரும் சுற்றுப் பயணிகளைக் கவரும் மையமாகும்.
  • பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் நாடாளுமன்றத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். பொதுமக்களில் பலரும் நாடாளுமன்ற வளாகத்தின் உள்ளே சிக்கிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இலண்டன் பாதாள இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
  • தாக்குதல்கள் இரண்டு அல்லது மூன்று முனைகளில் இருந்து தொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயப்பாடும் நிலவுகின்றது.
  • மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களும் சம்பவம் நடந்த இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதையும், அவசர சிகிச்சை வாகனங்கள் (ஆம்புலன்ஸ்) சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருப்பதையும் தொலைக்காட்சி அலைவரிசைகள் காட்டின. மோப்ப நாய்களும் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன.
  • பல பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வரும் வேளையில், காயமடைந்த பலர் படுக்கைகளில் கிடத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.