செயிண்ட்பீட்டர்ஸ்பெர்க் – இரஷியாவின் புகழ்பெற்ற நகர்ப்புற இரயில் நிலையங்களில் ஒன்றான செயிண்ட்பீட்டர்ஸ்பெர்க் நிலையத்தில் இரயில் பெட்டி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து, இதுவரையில் 10 பேர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
50 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் மாஸ்கோவுக்கு அடுத்து, இரஷியாவின் இரண்டாவது பெரிய நகராகும்.
இது குறித்து கருத்துரைத்த இரஷிய அதிபர் விளாடிமிர் புடின், பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் இந்த இரயில் வெடிவிபத்து இரஷிய அரசாங்கத்தால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அறிவித்திருக்கிறார்.
Comments