Home Featured நாடு 1எம்டிபி நிதி பெற்ற பாஸ் தலைவர் நஷாருடின் – அறிவித்தார் ரபிசி!

1எம்டிபி நிதி பெற்ற பாஸ் தலைவர் நஷாருடின் – அறிவித்தார் ரபிசி!

875
0
SHARE
Ad

rafizi 3 bilionகோலாலம்பூர் – 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து நிதியைப் பெற்றதாக முன்னாள் பாஸ் தலைவர் நஷாருடின் மாட் இசா மீது குற்றம்சாட்டினார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி.

முன்னதாக அறிவித்தது போல், இன்று வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரபிசி, நஷாருடின் மாட் இசாவின் பெயரை வெளியிட்டார்.

முன்னாள் பாஸ் துணைத்தலைவரான நஷாருடின், தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கால் உருவாக்கப்பட்ட குளோபல் மூவ்மெண்ட் ஆஃப் மாடெரேட்ஸ் (ஜிஎம்எம்) என்ற அமைப்பிற்குத் தலைவராக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice