Home Featured நாடு 4,500 ரிங்கிட்டுக்கு மலேசியக் குடியுரிமை: போலி ஆசாமியின் நடவடிக்கை அம்பலம்!

4,500 ரிங்கிட்டுக்கு மலேசியக் குடியுரிமை: போலி ஆசாமியின் நடவடிக்கை அம்பலம்!

743
0
SHARE
Ad

Fake mycardமலாக்கா – போலி மலேசிய அடையாள அட்டைகளை 4,500 முதல் 10,000 ரிங்கிட் வரையிலான விலையில் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்து வந்த நபரின் நடவடிக்கைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தேசியப் பதிவு இலாகாவில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றியதாக தன்னைக் கூறிக் கொண்ட அந்நபர், மலேசியக் குடியுரிமை பெற்றுத் தருவதாகவும், அடையாள அட்டை பெற்றுத் தருவதாகவும் கூறி மக்களுக்குப் போலி ஆவணங்களை அளித்து வந்திருக்கிறார்.

அந்நபரிடமிருந்து உண்மை நிலவரத்தை அறிய முயற்சி செய்த ‘தி ஸ்டார்’ இணையதளம், இந்தோனிசியர் ஒருவருக்கு குடியுரிமை வேண்டுமெனக் கூறி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

நிறைய இந்தோனிசியர் மற்றும் கம்போடிய நாட்டவர்களுக்கு தான் குடியுரிமை பெற்றுத் தந்திருப்பதாக அந்நபர் ஸ்டார் இணையதளத்திடம் கூறியிருப்பதோடு, அவ்வாறு குடியுரிமை பெற்றுத் தர 4,500 ரிங்கிட் செலவு ஆகும் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், பல வாடிக்கையாளர்களைத் தனக்கு அறிமுகம் செய்து வைத்தால், விலை இன்னும் குறைத்துக் கொடுப்பதாகவும் அந்நபர் கூறியிருக்கிறார்.