Home Featured உலகம் தனது மரணச் சம்பவத்தையே படம் பிடித்த அமெரிக்க இராணுவப் புகைப்படக் கலைஞர்!

தனது மரணச் சம்பவத்தையே படம் பிடித்த அமெரிக்க இராணுவப் புகைப்படக் கலைஞர்!

1023
0
SHARE
Ad

USarmyaccidentphoto1வாஷிங்டன் – அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர், தனது இறப்பிற்குக் காரணமான மோட்டார் குழாய் வெடி விபத்தைத், தனது கேமராவில் படம்பிடித்த நிலையில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு, ஜூலை 2-ம் தேதி, காபுலில் இராணுவத்தினர் நேரடி நெருப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் குழாய் வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறி விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில், அமெரிக்க இராணுவப் புகைப்படக் கலைஞர் ஹில்டா ஐ கிளேய்டன் என்ற பெண்ணும், 4 ஆப்கானிஸ்தான் இராணுவத்தினரும், மொத்தம் 5 பேர் பலியாகினர்.

USarmyaccidentphotoஇந்நிலையில், ஹில்டா மரணமடைவதற்கு முன் எடுத்த அந்தக் கடைசிப் புகைப்படங்கள் இரண்டை அமெரிக்க இராணுவம் தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அது தற்போது இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.