Home Featured நாடு விரைவில் பொதுத் தேர்தல்! பிரதமர் கோடி காட்டினார்!

விரைவில் பொதுத் தேர்தல்! பிரதமர் கோடி காட்டினார்!

827
0
SHARE
Ad

najib-umno-71-anniversary-11052017

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை இரவு தலைநகர் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற அம்னோவின் 71-வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது  விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று கோடி காட்டிய பிரதமர் நஜிப் துன் ரசாக் அதற்குத் தயாராக வேண்டுமென்றும் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளையும் அம்னோவினரையும் கேட்டுக் கொண்டார்.

அம்னோ ஆண்டுக் கொண்டாட்டத்திற்காக ஏறத்தாழ 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அரங்கில் திரண்டனர். அம்னோவினர் சிவப்பு வண்ண ஆடைகளில் வலம் வந்தனர். தேசிய முன்னணித் தலைவர்கள் மற்றும் உறுப்பியக் கட்சி உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் தேசிய முன்னணி வண்ணமாக நீலவண்ண ஆடைகளில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

“நாளையே நாம் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாமா? அனைவரும் தயாரா?” என நஜிப் கூட்டத்தினரை நோக்கிக் கேள்வி கேட்க மக்கள் ஆரவாரத்துடன் அதனை ஆதரித்தனர். இந்த உற்சாகம்தான் நமக்கு வேண்டும் என்றும் நஜிப் முழங்கினார்.

umno-71-anniversary-MIC leaders-11052017அம்னோ 71-வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் கலந்த கொண்ட மஇகா தலைவர்கள்…