Home Featured நாடு மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார் ஜாகிர் நாயக் – அறிக்கை தகவல்!

மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார் ஜாகிர் நாயக் – அறிக்கை தகவல்!

792
0
SHARE
Ad

zakir-naikகோலாலம்பூர் – இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகரான ஜாகிர் நாயக், மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருப்பதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஜாகிர் நாயக்கிற்கு குடியுரிமை வழங்குவதா? என்பது குறித்து மலேசிய அதிகாரிகள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அச்செய்தி அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், ஜாகிர் நாயக்கின் மீதான தீவிரவாத வழக்குகள் குறித்து மலேசிய அரசு நன்கு அறியும் என்பதால், தனது தூதரக உறவினைப் பயன்படுத்தி அவருக்கு குடியுரிமை வழங்குவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியிலும் இந்தியா இறங்கியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.