Home Featured நாடு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு – வைகோவிடம் மலேசிய அதிகாரிகள் விசாரணை!

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு – வைகோவிடம் மலேசிய அதிகாரிகள் விசாரணை!

1051
0
SHARE
Ad

vaiko

கோலாலம்பூர் – இன்று கோலாலம்பூர் வந்தடைந்த வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் மலேசிய அதிகாரிகளால் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார் என்றும், இலங்கை விடுதலைப் புலிகளுடனான அவரது தொடர்பை மையப்படுத்தி விசாரணைகள் அமைந்திருந்தன என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

அவரது அனைத்துலகக் கடப்பிதழ் தற்காலிகமாகப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இன்றிரவு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் புதல்வியின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள வைகோ மலேசியா வருகை தரவிருந்தார் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.