Home Featured இந்தியா பீகார் ஆளுநரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பாஜக!

பீகார் ஆளுநரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பாஜக!

854
0
SHARE
Ad

புதுடெல்லி – ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா, குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

இன்று திங்கட்கிழமை பாஜக தலைவர் அமித்ஷா செய்தியாளர்கள் முன்னிலையில் ராம்நாத் கோவிந்தின் பெயரை அறிவித்தார்.

எனினும், துணை குடியரசுத் தலைவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice