Home Featured நாடு பயங்கரவாதி மாமுட் அகமது உயிருடன் தான் இருக்கிறான் – காலிட் தகவல்!

பயங்கரவாதி மாமுட் அகமது உயிருடன் தான் இருக்கிறான் – காலிட் தகவல்!

852
0
SHARE
Ad

சிரம்பான் – மலேசியாவால் தேடப்பட்டு வரும் அதிபயங்கரவாதியான மாமுட் அகமது, பிலிப்பைன்ஸ் மாராவி நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

“பிலிப்பைன்ஸ், மாராவி நகரில் நடந்த தாக்குதலில் மாமுட் கொல்லப்பட்டுவிட்டானா எனப் பலர் கேட்கின்றனர். ஆனால் எனக்கு இப்போது தான் தகவல் கிடைத்தது மாமுட் இறந்துவிட்டதாகச் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. அப்படியென்றால் மாமுட் இன்னும் உயிருடன் இருக்கிறான். மாராவி நகரைச் சுற்றிவளைக்க நினைக்கும் தீவிரவாதிகளோடு மாமுட் இருக்கிறான்” என்று காலிட் தெரிவித்தார்.