கோலாலம்பூர் – சுமத்ராவில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிலாங்கூர் மாநிலம் சபா பெர்னாமில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இன்று காலை 9.24 மணியளவில் சிலாங்கூரில் சில பகுதிகளில் அதிர்வுகள் ஏற்பட்டது என்றும், என்றாலும் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.