Home உலகம் டிரம்ப் வருகைக்கு லண்டன் மேயர் எதிர்ப்பு!

டிரம்ப் வருகைக்கு லண்டன் மேயர் எதிர்ப்பு!

907
0
SHARE
Ad

Donald trump- aeroplane-file pic-லண்டன் – பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயின் அழைப்பை ஏற்று பிரிட்டனுக்கு வருகை புரியவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க அந்நாட்டில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரிட்டன் பாரம்பரிய வழக்கப்படி, அமெரிக்க அதிபர்களுக்கு வழங்கப்படும் சிவப்புக் கம்பள வரவேற்புத் தயாராகி வருகின்றது.

இந்நிலையில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த லண்டன் மேயர் சாதிக் கான், டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவிற்குள் ஈராக், சிரியா உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.