Home நாடு இருமொழி பாடத்திட்டத்தை நீக்கக் கோரி பிரதமரிடம் நாம் தமிழர் இயக்கம் மனு

இருமொழி பாடத்திட்டத்தை நீக்கக் கோரி பிரதமரிடம் நாம் தமிழர் இயக்கம் மனு

880
0
SHARE
Ad

dlp-memo-pmo-18082017 (5)புத்ரா ஜெயா – தமிழ்ப்பள்ளியில் அமல்படுத்தபடும் இருமொழி கொள்கை பாடத்திட்டத்தை எதிர்த்தும் அதை நீக்கக் கோரியும் மலேசிய நாம் தமிழர் இயக்கம் முன்னெடுப்பில் அனைத்து தமிழர் தேசிய இயக்கங்களின் ஒத்துழைப்புடன் மூன்றாவது மனு இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி திரு தனசீலனிடம் வழங்கப்பட்டது.

ஏற்கெனவே தமிழர் இயக்கங்கள் ஒருங்கிணைப்பில் இருமுறை கல்வி அமைச்சிடம் மனு வழங்கப்பட்டு, இதுவரை எந்தப் பயனும் இல்லாததால் நேரடியாகப் பிரதமர் பார்வைக்காக மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. அ.கலைமுகிலன் தேசிய வியூக இயக்குனர் வீ. பாலமுருகன் மற்றும் ஆலோசகரும் தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவருமான பொன் ரங்கன் ஆகியோரால் சுமார் ஒரு மணி நேர கலந்துரையாடலுக்கு பிறகு மூன்றாவது மனு வழங்கப்பட்டது.

dlp-memo-pmo-18082017 (2)மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதை பரிசீலிப்பதாகவும் அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு சந்திப்பை ஒருங்கிணைப்பதாகவும் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

உலகக் கல்வி நிறுவனமாகிய UNESCO-வின் ஆய்வின்படி தொடக்கப்பள்ளி மாணவர்கள் அனைவரும் அவரவர் தாய்மொழியிலேயே கல்வியைக் கற்க வேண்டும். ஏனெனில் தாய்மொழி உரிமை அவரவர் பிறப்புரிமை. மேலும் மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திலும் தாய்மொழி உரிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்ப்பள்ளிகளில் மலாய், ஆங்கிலம் தவிர மற்ற அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்றார் கலைமுகிலன்.

dlp-memo-pmo-18082017 (1)மாணவர்கள் அதிகரிப்பு மற்றும் ஆங்கில ஆற்றல் மட்டுமே முக்கியமென கருதும் சிலரின் கூற்றான இந்த (டிஎல்பி) இருமொழித் திட்டத்தை தமிழ்ப்பள்ளியில் அனுமதித்தால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ்மொழியின் பயன்பாடு, தமிழ் ஆசிரியர்கள் மற்றும் தமிழ்ப்பள்ளி நிலைத்தன்மையே இல்லாமல் போய்விடும் என்பதே நிதர்சனமான உண்மை.

எனவே அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் காப்பற்றி ஒரு சிறப்பான ஒளிமயமான பாதுகாப்பான இன அடையாளத்தில் முழு உரிமை உள்ள எதிர்காலத்தை நாம் உருவாக்கி கொடுக்க மலேசிய நாம் தமிழர் இயக்கம் இறுதிவரை உறுதியுடன் (டிஎல்பி)-யை எதிர்த்து போராடும் அதற்கு மலேசியாவில் உள்ள அனைத்து இயக்கங்களும் மற்றும் அனைத்து தமிழின உணர்வாளர்களும் தங்களுடன் இணைந்து களமாட வேண்டுமென என கலைமுகிலன் வலியுறுத்தினார்.

dlp-memo-pmo-18082017 (3)dlp-memo-pmo-18082017 (4)

பிரதமரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்ட மனு…