Home நாடு பத்துமலைத் தங்கரதம்: பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு!

பத்துமலைத் தங்கரதம்: பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு!

903
0
SHARE
Ad

Thangaratham1பத்துமலை – நாளை வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, பத்துமலைத் திருத்தலத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் புறப்பட்ட தங்கரதம், மதியம் 12.35 மணியளவில் புடுராயாவில் உள்ள கோர்ட்டு மலைப் பிள்ளையார் கோயிலை அடைந்தது.

இந்தத் தங்க ரத வெள்ளோட்டத்தை இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் கட்டமைப்பிற்கான மலேசியாவின்  சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு துவக்கி வைத்தார்.

இன்று மாலை, கோர்ட்டு மலைப் பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், அங்கிருந்து பிரிக்பீல்ட்ஸ் துன் சம்பந்தன் சாலை வரையில் விநாயகப் பெருமான் தங்க இரதத்தில் பவனி வருக்கிறார்.

#TamilSchoolmychoice

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோர்ட்டு மலைப் பிள்ளையார் கோயிலில் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

படம்: உதிரநந்தன்