Home வணிகம்/தொழில் நுட்பம் “கருவாக்கம், உருவாக்கம், விரிவாக்கம்” – கனடா மாநாட்டில் முத்து நெடுமாறன் உரை

“கருவாக்கம், உருவாக்கம், விரிவாக்கம்” – கனடா மாநாட்டில் முத்து நெடுமாறன் உரை

1544
0
SHARE
Ad

16 Tamil-internet conf-26082017 (3)தொரண்டோ – உத்தமம் அனைத்துலக அமைப்பின் 16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு சனிக்கிழமை, 26 ஆகஸ்டு 2017-ஆம் நாள் கனடாவின் தொரண்டோ நகரில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.

இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் கருத்தரங்கம் காலை 9.30 மணி அளவில் தொடங்கியது.

நேரில் வந்து கலந்து கொள்ள இயலாதவர்களின் காணொளி படைப்புகள் முதல் பகுதியில் காட்டப்பட்டன.

#TamilSchoolmychoice

இரண்டாம் நாள் கருத்தரங்கின் முகாமை உரையை மலேசியாவின் முத்து நெடுமாறன் வழங்கினார். “கருவாக்கம், உருவாக்கம், விரிவாக்கம்” என்ற தலைப்பில் அவரின் முகாமை உரை அமைந்திருந்தது. ஒரு புத்தாக்கச் சிந்தனையை, அதன் கருவில் இருந்து உருபெறச் செய்து, பயனர்களின் கையில் வெற்றிகரமாகச் சென்றடைவதற்கு, நுட்பவியலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை அவர் தெளிவாக விளக்கினார்.

16 Tamil-internet conf-26082017 (4)முகாமை உரையைத் தொடர்ந்து மற்றொரு மலேசியக் கட்டுரையாளரான கஸ்தூரி ராமலிங்கம் (படம்), ‘ஊடாடல் நகர்படங்கள் அடங்கிய மின்னூல்களின் வழி தமிழ்க் கல்வி’ என்ற தலைப்பில் தமது கட்டுரையைப் படைத்தார்.

இரண்டு கட்டுரைகளும் அனைவரின் வரவேற்பைப் பெற்றன. கேள்விகளும் கருத்துகளும் பரிமாறப்பட்டன.

16 Tamil-internet conf-26082017 (2)தொடர்ந்து நுட்பவியல், கல்வி, மொழியியல் சார்ந்த கட்டுரைகள் படைக்கப்பட்டன. சிங்கப்பூரைச் சேர்ந்த இணைப்பேராசிரியர் இரா சிவகுமாரன் (படம்), ‘கற்பித்தலில் தரவக மொழியியலின் பங்கு’ என்னும் தலைப்பில் தமது கட்டுரையைப் படைத்தார்.

16 Tamil-internet conf-26082017 (1)கனடாவைச் சேர்ந்த முனைவர் பிரண்டா பெக் (படம்) படைத்த, தரவுகளின் மின்னாக்கப் பணிகளைப் பற்றிய கட்டுரை பலரின் கவனத்தை ஈர்த்தது.

கொங்கு நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரிக்கப்பட்ட எழுத்து, ஒலி, காணொளி வடிவில் உள்ள வரலாற்றுத் தரவுகளை, தொடாண்டோ பல்கலைக்கழகத்தில் நிலையான தரவகமாக (archive) அமைக்க அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி கருத்துரைத்தார்.

மாலையில் நடைபெற்ற இரண்டு தொழில்நுட்ப பயிலரங்குகளைத் தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்சிகள் நிறைவடைந்தன.