Home இந்தியா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநரைச் சந்திக்கிறார் தினகரன்

ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநரைச் சந்திக்கிறார் தினகரன்

841
0
SHARE
Ad

ttv-dinakaran-சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 3.00 மணி நிலவரம்)

தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தற்போது ஆளுநர் மாளிகையை வந்தடைந்துள்ளார்.

அவருக்கு சுமார் 50 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தினகரன் ஆதரவாளராக இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் அணி மாறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தனது அதரவு நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

தினகரன் அணியினர் ஆளுநரைச் சந்திப்பதால், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழந்துள்ளது.